தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்

தேமுதிக தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளி,வாருங்கள் தோழர்களே ஒரு மாற்றத்தை உருவாக்குவோம்

Posts Tagged ‘கோரிக்கை

தலைவர் சிலைகளுக்கு அரசு பாதுகாப்புகொடுக்க வேண்டும், திராவிடர் தலைவர் கோரிக்கை

leave a comment »

thiravidar ,thalaivan,vijayakanth,விஜயகாந்த்,திராவிடன்,தலைவர்

தலைவர்களின் சிலைகளை அரசுதான் பாதுகாக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலையை சிலர் இழிவுபடுத்தியிருப்பது தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமானது என்று சாடிள்ளார்.

இந்தச் செயலைத் தொடர்ந்து ஏற்பட்ட சம்பவங்களால், மதுரை வட்டாரத்தில் பொது மக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தலைவர்களின் சிலைகளை வைப்பதற்கு அரசுதான் அனுமதி அளிக்கிறது; எனவே, அரசுதான் தலைவர்களின் சிலைகளைப் பாதுகாக்கவும் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மதுரையில் சம்பவம் நடந்தவுடன் அந்தப் பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி பாதுகாப்பு அளித்திருந்தால் தடியடி நடத்தும் அளவுக்கு காவல்துறை செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Written by dmdk

ஏப்ரல் 23, 2008 at 9:06 முப