டெல்லியில் புதிய அலுவலகம் திறந்து வைத்தார் திராவிடர் தலைவர் விஜயகாந்த
டெல்லியில் கரோல் பாக் பகுதியில் தேமுதிக அலுவலகத்தை திறந்து வைத்தார் திராவிடர் தலைவர் விஜயகாந்த். இந் நிகழ்ச்சியில் விஜய்காந்தின் துணைவியார் பிரேமலதா, அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளருமான சுதீஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பின்னர் ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில்,
மத்திய ஆட்சியில் தேமுதிக பங்கு வகிக்க வேண்டும் என்றோ, பிரதமராக வேண்டும் என்றோ எனக்கு ஆசை கிடையாது,
நாங்கள் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி வைத்துள்ளோம். வேறு யாருடனும் கூட்டணி இல்லை. ஒரு வேளை தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் கட்சியாக இருந்தால் அதனுடன் கூட்டணி குறித்துப் பேசலாம்.
ஆனால் மக்களுக்கு நல்லது செய்வோம் என்று காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி, பிற கட்சிகளாக இருந்தாலும் சரி எழுத்துப்பூர்வாக எழுதித் தர வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற ஒரே காரணத்திற்காக முல்லைப் பெரியாறு, பாலாறு, ஓகனேக்கல் என அனைத்துப் பிரச்சினைகளிலும் தமிழக மக்களின் நலன்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது காங்கிரஸ் கட்சி.
நாங்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக தேவையாக இருந்தால் மட்டுமே போராட்டம் நடத்துகிறோம். சட்டசபையில் நான், பஸ் கட்டண உயர்வு குறித்துப் பேசிய பிறகுதான் பஸ் கட்டணத்தை குறைத்தனர். முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக மக்கள் பிரச்சினைகள் குறித்து சட்டசபையில் பேசுவதே இல்லை.
டி.ஆர்.பாலு விவகாரம் குறித்து சட்டசபையில் பேச அனுமதியே தருவதில்லை.
எனக்கு எத்தனையோ சோதனைகள் தந்தார்கள். ஆனால் எத்தனை சோதனைகளை அவர்கள் கொடுத்தாலும் அதை சமாளிப்பேன். வெற்றி பெறுவேன்.
சினிமாவில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று சுகாதார அமைச்சர் அன்புமணி கூறி வருகிறார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல பிரச்சினைகள், குறைபாடுகள் உள்ளன. இவற்றை சரி செய்ய அவர் நடவடிக்கை எடுக்கவேண்டும்,
திருவள்ளூரில் நான்கு பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக இறந்தன. அதற்கு என்ன காரணம் என்பதை அவர் கண்டுபிடிக்கட்டும்.
இந்த டெல்லி பயணத்தின்போது பல்வேறு தேசியத் தலைவர்கள், தலைவரை சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது.
இந்தியாவில் மதவாத கருத்துக்களை பரப்பி மக்களை கூறு போட்டு ஆட்சியில் அமர துடிக்கும் பாஜகவுடன் கூட்டு சேர தயார் என அறிவித்துள்ளார். இதோடு விட்டால் பரவ இல்லை, கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க தயார் என்று அறிவித்து உள்ளத்தால் தனது அரசியல் அறிவு எந்த அளவுக்கு உள்ளது என்பதை எடுத்துக் காட்டி உள்ளது.
lightink
மே 5, 2008 at 4:16 பிப
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே,,,முடிந்தவரையில் தனித்து ஆட்சி அமைப்பதே தேமுதிகவின் நோக்கம்,ஆனால் மக்களின் நலனுக்காக வலுவான கட்சிகலுடன் கூட்டணி அமைக்க வேண்டி உள்ளது…
தேமுதிக
மே 6, 2008 at 2:23 முப
\\மக்களின் நலனுக்காக வலுவான கட்சிகலுடன் கூட்டணி அமைக்க வேண்டி உள்ளது…\\
இதையே தான் இந்தியாவில் உள்ள அனைத்து காட்சிகளும் சொல்கின்றன.
என்னுடைய கேள்வி உங்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
lightink
மே 6, 2008 at 4:16 முப
இதையும் கொஞ்சம் படிங்க http://poarmurasu.blogspot.com
lightink
மே 6, 2008 at 4:38 முப
http://kadugu.wordpress.com/2008/05/05/vijayakant-at-delhi/
கடுகு.காம்
மே 6, 2008 at 6:18 முப
மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுவது என்பதற்காக எதையும் தேமுதிக செய்வதில்லை,குறிக்கோள் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவு செய்து,சிறந்த ஆட்சியை வழங்குவதாகும்…
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும், நன்றிகள் நண்பரே…
தேமுதிக
மே 6, 2008 at 6:48 முப
தமிழகத்தை இதுவரை ஆட்சிசெய்த மற்ற கட்சிகளிடமிருந்து எந்த விதத்தில் இவரது கட்சி மாறுபட்டுள்ளது என்பதைக் காண மக்கள் விரும்பினாலும், திடீரென ஒரு புதிய கட்சியிடம் ஆட்சியை ஒப்படைக்கத் தயாராயில்லை என்பதுதான் தமிழக மக்களின் இன்றைய நிலை.
– கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி.
கிரிஜா மணாளன்.
மே 8, 2008 at 12:00 பிப
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும், நன்றிகள் நண்பரே… ”
dmdk
மே 8, 2008 at 5:20 பிப